Published : 22 Jun 2016 07:58 AM
Last Updated : 22 Jun 2016 07:58 AM

என்எஸ்ஜியில் உறுப்பினராக இணைய பாகிஸ்தானுக்கு சீனா பகிரங்க ஆதரவு

என்எஸ்ஜியில் இணைய இந்தியா வுக்கு விதிவிலக்கு அளித்தால் அதே விதிவிலக்கை பாகிஸ்தானுக்கும் அளிக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.

இதுவரை மறைமுகமாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வந்த சீனா முதல்முறையாக பகிரங்கமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

அணுமூலப்பொருள் விநியோக குழுவில் (என்.எஸ்.ஜி.) 48 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் உறுப்பு நாடாக இணைய இந்தியா வும் பாகிஸ்தானும் விண்ணப்பித் துள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பான்மை யான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. ஆனால் சீனா மட்டும் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் என்எஸ்ஜி நாடுகளின் வருடாந்திர கூட்டம் தென் கொரியா தலைநகர் சியோலில் வரும் 23, 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த வருடாந்திர கூட்டத் துக்கு முந்தைய 2 நாள் நிபுணர் கள் அளவிலான கூட்டம் சியோலில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தானின் விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் நேற்று வெளியான தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது:

அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத் திடவில்லை. இதுகுறித்து நார்வே, நியூசிலாந்து, தென்ஆப்பிரிகா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. ஆனால் இந்திய ஊடகங்கள் சீனாவை மட்டுமே குறிவைத்து விமர்சனம் செய் கின்றன. ஆசியாவில் சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அணுசக்தி நாடுகளாக விளங்கு கின்றன. என்எஸ்ஜியில் இந்தியா இணைவதால் சீனாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

கடந்த 1996-ல் ஐ.நா. சபை சார்பில் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதில் கையெழுத்திட்ட நாடுகள் மட்டுமே சட்டபூர்வமான அணுசக்தி நாடுகள். இந்தியாவும் பாகிஸ்தானும் 1998-ல் அணுகுண்டு சோதனைகளை நடத்தின. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இரு நாடுகள் மீதும் பொருளாதார தடைகளை விதித்தன. பின்னர் படிப்படியாக தடைகள் விலக்கப்பட்டன.

என்எஸ்ஜியில் இணைய இந்தியாவுக்கு விலக்கு அளித்தால் அதே விதிவிலக்கை பாகிஸ்தானுக் கும் அளிக்க வேண்டும். இந்தி யாவை இணைத்து பாகிஸ்தானை வெளியேற்றும் நடவடிக்கைக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் ஆட்சேபம் தெரிவிக்கும்.

இவ்வாறு அந்த தலையங் கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

அமெரிக்க அதிபர் மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்எஸ்ஜி-யில் உறுப்பினராக இந்தியா தயாராக உள்ளது. என்எஸ்ஜி நாடுகளின் ஆண்டுக் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஆதரிக்கும்படி உறுப்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது. அதேநேரத்தில் என்எஸ்ஜி-யில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு, உறுப்பு நாடுகள் ஒருமித்த முடிவுக்கு வருவது அவசியமாகிறது. இத்தருணத்தில் இந்தியாவை அமெரிக்கா நிச்சயம் ஆதரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x