குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஒத்துழைப்பு- ஆந்திர ஆளுநர் நரசிம்மன் வேண்டுகோள்

குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஒத்துழைப்பு- ஆந்திர ஆளுநர் நரசிம்மன் வேண்டுகோள்

Published on

குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் ஞாயிற்றுகிழமை தெரி வித்தார்.

இதுகுறித்து, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்திய அரசியல் சட்டம் 356ன்படி குடியரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் மாநில ஆளுநராக நான் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக அமல்படுத்துவேன்.

தெலங்கானா மற்றும் சீமாந்திரா ஆகிய இரண்டு பகுதி மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். சட்டத்துக்குப் புறம்பாக தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in