

டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களிடம் கூறியதாவது:
உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியில் ராகுல் காந்திக்கு பொறுப்பு உள்ளது. அதேவேளையில் அவரை மட்டும் குறைசொல்வது நியாயமாகாது. ராகுலின் சகோதரி பிரியங்காவும் பிரச்சாரத்தில் பங்கேற்றவர் என்ற முறையில் தோல்விக்கு அவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த வெற்றி மோடி தலைமையி லான அரசுக்கும் அதன் கொள்கைக்கும் கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டு ஸ்மிருதி இரானி தோல்வியடைந்தார்.