போலீஸுக்கு எதிராகப் போராட்டம்: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லி போலீஸாரை எதிர்த்து, முதல்வர் கேஜ்ரிவால் தர்னா போராட்டம் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி யாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர் பாளர் சஞ்சய்சிங் கூறுகையில், “டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய கவலை அம் மக்களின் பாதுகாப்பு. இதற்காக, போலீஸை டெல்லி அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என கோரி வருகிறோம். இதற்காக, டெல்லி போலீசை எதிர்த்து திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு உள்துறை அமைச்சகம் முன்பாக தர்ணா போராட்டம் நடக்கும்” என்றார்.
டெல்லி போலீஸார் துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள் என்பதால் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் ‘நார்த் பிளாக்’ல் திங்கள்கிழமை காலை 11.00 மணிக்கு நடக்க இருக்கும் போராட்டாத்தில் டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களுடன் அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் கலந்து கொள்கிறார்கள்.
இதைத் தடுக்க மத்திய அரசு, ஜனவரி 26-ல் நடைபெறவிருக்கும் குடியரசு தின ஊர்வலத்தை காரணம் காட்டி அப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை அப்பகுதியின் துணை போலீஸ் ஆணையர் எனிஷ் ராய் உத்தரவிட்டிருக்கிறார். இது 19 முதல் 22-ம் தேதி வரை அமுலில் இருக்கும்.
டெல்லியில் முதன் முறையாக ஒரு முதல் அமைச்சரே கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தில் கைதுகள் எப்படி இருக்கும் என்பதைக் காண டெல்லிவாசிகள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கி றார்கள்.
