

சீனாவை சமாளிக்கும் வகையில் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட 6 எரிபொருள் விமானங்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்திய விமானப்படையில் இயங்கும் போர் விமானங் களுக்கு நடுவானில் இருந்தபடி எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட எரிபொருள் விமானங் களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வந்தது. சர்வதேச ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற் கொள்ளப்பட்ட இந்த முயற் சிக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து 6 எரிபொருள் விமானங்களை நேரடியாகவே கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
இதன் விளைவாக ரூ.9,000 கோடியில் 6 ஏர்பஸ்-330 எம்ஆர்டிடி (பன்முக டேங்கர் போக்குவரத்து) விமானத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதிகவிலை மற்றும் சிபிஐ வழக்குகள் போன் றவை தடைகற்களாக நிற்பதால், இந்த ஒப்பந்தத்தை கைவிடும் முடிவு எடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, ‘‘ஏர்பஸ் 330 வகை விமா னத்தை வாங்கும் முடிவு கைவிடப் படுகிறது. அதற்கு பதிலாக எரி பொருள் நிரப்பும் விமானங்களை நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-2004-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாகிஸ்தானை சமாளிக்கும் வகையில் 6 எரி பொருள் நிரப்பும் விமானங்கள் வாங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சீனாவை சமாளிப் பதற்காக கூடுதலாக 6 எரிபொருள் நிரப்பும் விமானங்களை நேரடி யாக கொள்முதல் செய்ய வேண்டும் என 2006-ல் மத்திய அரசிடம் விமானப்படை சார்பில் முதல் முறையாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்கும் வகையில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பாரிஸில் நடந்த உச்சி மாநாட்டின்போது பிரான்ஸிடம் இருந்து 36 ரபெல் விமானங்களை நேரடியாக கொள்முதல் செய் வதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதன் அடிப்படையில் தான் இந்த 6 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் நேரடியாக கொள் முதல் செய்யப்படவுள்ளன. சீனாவின் அத்துமீறலை எளிதாக தடுக்கும் வகையில் இந்த புதிய விமானங்கள் வாங்கப்பட்டால் மேற்குவங்க மாநிலம் பனாகரில் உள்ள விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்க திட்டமிடப் பட்டுள்ளது.