

பிஹாரில் உள்ள கிராமத்தில் 3 மாவோயிஸ்டுகள், ஏகே-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப் பட்டனர்.
பிஹார் மாநிலம், முஸாஃபர்பூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஒன்று கூடுவதாக, காவல் துறை யினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் சோதனை நடத்தியபோது, சரயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோரிகவான் கிராமத்தில் பதுங்கி யிருந்த, 3 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக, மாவட்ட சீனியர் எஸ்.பி வினய்குமார் தெரிவித்தார்.
இவர்களிடம் இருந்து, ஏகே-56 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் கமலேஷ்ஜி என்பவரும் ஒருவர். சரண் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ்ஜி, பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். மற்ற இருவரின் பின்னணியை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.