

பிரான்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பொதுநிகழ்ச்சி ஒன்றில் மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 80 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவம். இந்நிலையில், வெளியுறவுச் செயலர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாரீஸ் நகரில் உள்ள இந்திய தூதர் அங்கிருக்கும் இந்திய மக்களுடன் தொடர்பில் இருக்கிறார். இதுவரை இந்தியர்கள் யாரும் இத்தாக்குதலில் உயிரிழந்ததாகத் தெரியவில்லை. பாரீஸில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டுக்காக 33—1—40507070 என்ற ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.