

ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளத் தில் நாசா நிறுவனத்தில் வேலை கிடைத்ததாகக் கூறி ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் கம்லாபூரைச் சேர்ந்தவர் அன்சர் கான் (20). கடந்த ஒரு மாதமாக மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகளை சந்தித்து தனக்கு நாசா நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாகக் கூறி பாராட்டு விழா எடுக்க வேண்டு மென்று கூறியிருக்கிறார். இதை நம்பிய பலரும் அவருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
தனது வீட்டில் பொருத்தப்பட் டுள்ள ஒரு கருவி தட்பவெப்ப நிலையை ஆய்வுசெய்து, வாஷிங் டனில் உள்ள நாசா ஆய்வு மையத் துக்கு அனுப்பிவைக்கும் என்றும் கூறியதை ஊரே நம்பியிருக்கிறது. முதலில் பாராட்டு விழா நடத்தியது அவர் படித்த பள்ளிதான். சுதந்திர தினத்தில் அவரை கூப்பிட்டு மாலை, மரியாதையுடன் கொடியை யும் ஏற்றச்சொல்லி பாராட்டியிருக் கிறது. இது உள்ளூர் பத்திரிகை களில் செய்தியாக வந்ததும் போகும் இடமெல்லாம் கானுக்கு ராஜ மரியாதை கிடைத்திருக்கிறது.
அடுத்து, தேவாஸ் மாவட்ட எஸ்.பி. சஷிகாந்த் சுக்லாவை சந்தித்திருக்கிறார் அன்சர் கான். அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட ஐ.டி. கார்டை காண்பித்து, தனக்கு ஆண்டுக்கு ரூ.1.8 கோடி சம்பளத்தில் நாசா வேலை கிடைத்திருப்பதாகக் கூறி யிருக்கிறார். சுக்லாவுக்கு சந்தேகம். உடனே விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் பிளஸ் 2-வில் தேர்ச்சி பெறாத அன்சர் கான், பெயிலான 2 பாடத்தை இரண்டு முறை எழுதிய பிறகே பாஸ் செய்த தும், பிஎஸ்சி முதல் ஆண்டுடன் படிப்பை நிறுத்திவிட்டதும் தெரிய வந்தது. உடனே அன்சர் கானை கைது செய்ய உத்தரவிட்டார் எஸ்.பி. சுக்லா. விசாரணையில், உண்மையை ஒப்புக்கொண்ட அன்சர் கான், புகழுக்கு ஆசைப்பட்டு தான் அப்படி நடந்ததாகக் கூறி கதறி அழுதிருக்கிறார். மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் அன்சர் கான்.