

பழங்குடியினர் பட்டியலில் தமிழகத்தின் நரிக்குறவர் ஜாதியை சேர்க்கும் வகையில், பழங்குடியினர் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில், பழங்குடியினர் பட்டியலில் தற்போது 36 ஜாதிகள் உள்ளன. இதில் குருவிக்காரன் என்ற பிரிவின் கீழ் பல்வேறு ஜாதிகள் உள்ளன. இதில் நரிக்குறவர் சமூகத்தையும் இணைப்பதற்கு இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. இதுபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் பட்டியலில் 42 ஜாதிகள் உள்ளன. இந்நிலையில் இதில் தனுகார், தனுவார் என்ற மேலும் 2 ஜாதிகள் சேர்க்கப்படுகின்றன.
இந்த 3 ஜாதிகளையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் வகையிலான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை, பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் வி.கிஷோர் சந்திர தியோ, மக்களவையில் கடும் அமளிக்கிடையே நேற்று தாக்கல் செய்தார்.