

ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரது நீதிமன்ற காவல் வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே ராய்கட் வனப்பகுதியில் இளம் பெண் ஷீனா போரா கொன்று புதைக்கப் பட்ட சம்பவம் கடந்த ஆண்டு அம்பலமானது. இந்தக் கொலை வழக்கில் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப் பட்டுள்ளார்.
கொலைக்கு உடந்தையாக இருந்த இந்திராணியின் இரண்டா வது கணவர் சஞ்சீவ் கண்ணா, ஓட்டுநர் ஷ்யாம்வர் ராய் ஆகியோ ரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் கண்ணா அப்ரூவராக மாறி உள்ளார்.
சிபிஐ நடத்திய விசாரணையில் இந்திராணியின் 3-வது கணவரும், ஸ்டார் இந்தியா டிவியின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவரும் கடந்த ஆண்டு கைதானார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தில் இவ்வழக்கு நேற்று விசா ரணைக்கு வந்தது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரது நீதிமன்றக் காவலை வரும் செப்டம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் தேவ்ப்ரீத் சிங் கூறும் போது, “இவ்வழக்கு தொடர்பாக செய்தி சேனல் ஒளிபரப்பிய ஆடியோ பதிவுகள் அனைத்தும் நீதி மன்றத்தில் ஆதாரங்களாக சமர்ப் பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.