

குத்துச் சண்டை வீரர் முகமது அலி கேரளாவை சேர்ந்தவர் என்று தவறு தலாக கூறிவிட்டதாக அந்த மாநில விளையாட்டு துறை அமைச்சர் ஜெய ராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஹெவி வெயிட் குத்துச் சண்டை வீரர் முகமது அலி (74) நேற்றுமுன்தினம் காலமா னார். அவரது மறைவு குறித்து கேரள விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜனிடம் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் செல் போனில் கருத்து கேட்டார்.
அப்போது அமைச்சர் மிகுந்த துக்கத்துடன், கேரளாவைச் சேர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் முகமது அலி. அவர் தங்க பதக்கத்தை வென்று கேரளாவின் பெருமையை உலகறியச் செய்தார் என்று தெரிவித்தார்.
அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த செய்தி வாசிப்பாளர் செல் போன் தொடர்பை துண்டித்தார். அமைச் சரின் அறியாமை சமூக வலைத்தளங் களில் மிக அதிகமாக விமர்சிக்கப் படுகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ஜெயராஜன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரு தொலைக்காட்சி சேனலில் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. முகமது அலி மரணம் குறித்து கருத்து கேட்டார்கள். நான் கேரளாவை சேர்ந்த விளையாட்டு வீரர்தான் உயிரிழந்துவிட்டார் என்று தவறுதலாக புரிந்து கொண்டு கருத்து கூறிவிட்டேன். எப்படியிருந்தாலும் தவறு தவறுதான். அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.