

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு நிலையை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய எல்லைக் கட்டுப்பாடு நிலையை குறி வைத்து இன்று பிற்பகல் 1 மணி அளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.
இதில், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜிதேந்தர் காயமடைந்தார். அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய தரப்பும் தக்க பதில் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.