சுனந்தாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: எதிர்கட்சிகள் கோரிக்கை

சுனந்தாவின் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும்: எதிர்கட்சிகள் கோரிக்கை
Updated on
1 min read

சுனந்தா புஷ்கரின் மரணம் குறித்த விசாரணை நடத்த வேண்டும் என பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் பேசியபோது, நடந்த சம்பவம் மிகவும் துயரமானது, இதன் பின்னணியில் நடந்தவை என்ன என்பது குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியபோது, இதில் ஐஎஸ்ஐ உளவாளி, ஐபிஎல் கிரிக்கெட் போன்ற பன்னாட்டு விஷயங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. எனவே சிபிஐ அல்லது எஸ்.ஐ.டி போன்ற தனிப்படை அமைத்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

சசி தரூரை நீக்க வேண்டும்

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஹைதராபாதில் நிருபர்களிடம் கூறியதாவது:

சுனந்தா புஷ்கரின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து மத்திய மனிதவளத் துறை இணையமைச்சர் சசி தரூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கு விசாரணை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in