Last Updated : 26 Jul, 2016 08:42 AM

 

Published : 26 Jul 2016 08:42 AM
Last Updated : 26 Jul 2016 08:42 AM

திருநங்கை மசோதாவில் என் கருத்தையும் ஏற்கலாம்: திருச்சி சிவா வலியுறுத்தல்

மத்திய அரசு கொண்டுவர இருக் கும் திருநங்கை மீதான மசோதா வில் தனது கருத்துகளும் ஏற்கப்பட வேண்டும் என திருச்சி சிவா கோரியுள்ளார். மாநிலங்களவை யின் திமுக மூத்த உறுப்பினரான அவர், இதுகுறித்து ‘தி இந்து’விற்கு பேட்டி அளித்தார்.

மாநிலங்களவையில் நீங்கள் அறிமுகப்படுத்திய திருநங்கை நல மசோதாவின் தற்போதைய நிலை என்ன?

கடந்த 45 வருடங்களாக எந்த உறுப்பினரின் தனிநபர் மசோதா வும் ஏற்கப்பட்டதில்லை. இதன் பின் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்ட எனது மசோதா, மக்களவையில் பிஜு ஜனதா தளத்தின் ஒடிஷா உறுப்பினரான ஜே.பாண்டாவால் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதன் மீதான விவாதம் பல்வேறு காரணங்களுக் காக தள்ளிப் போய்கொண்டிருக் கிறது. இந்த மழைக்காலக் கூட்டத் தொடருக்குள் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்கள் மசோதாவை தான் மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்ததே?

எனது மசோதாவை செய லிழக்கச் செய்ய வேண்டி, அரசு தனியாக ஒரு மசோதா தாக்கல் செய்ய அமைச்சரவையின் அனு மதி பெற்றுள்ளது. தனிநபருக்கு பெயர் வந்திடாமல் இருக்க வேண்டி ஓர் அரசே செயல்படுகிறது.

உங்களை பார்த்து அரசே திரு நங்கை நலனுக்காக ஒரு மசோதா கொண்டு வரும்போது அதையே நீங்கள் ஆதரிக்கலாமே?

நான் கொண்டு வந்த அதே நோக்கத்திற்காக அந்த மசோதா நிறைவேற்றுவதாக இருந்தால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், எனது மசோதா வில் உள்ள பல முக்கிய அம்சங் களை தவிர்த்துவிட்டு, பெயரளவில் திருநங்கைக்காக ஒரு மசோதா கொண்டு வர முயல்கிறது. எனவே, எனது மசோதாவின் சரத்துகளை அரசு ஏற்று மசோதாவை கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்

நீங்கள் கூறும் அந்த முக்கிய சரத்துகள் என்ன?

கல்வி மற்றும் வேலைவாய்ப் பில் 2 சதவீதம் திருநங்கைக்கான ஒதுக்கீடு அதில் தரப்படவில்லை. உதவித்தொகை, மருத்துவ வசதி மற்றும் விடுதி வசதி போன்றவைகள் அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இது தரப்படுகிறதா இல்லையா என்பதை கண்காணிக்கும் அமைப்புகள் அரசு மசோதாவில் இல்லை.

இதற்காக, தேசிய மற்றும் மாநில அளவில் பிற்படுத் தப்பட்டோர், மகளிர் போன்ற சட்ட ரீதியான ஆணையங்கள், திருநங்கைக்காகவும் உருவாக்க எனது மசோதாவில் கூறப்பட்டுள் ளது. திருநங்கைக்கு எதிரான குற்றங்களுக்கு பொருத்தமாக ஐபிசியில் சட்டதிருத்தம் செய்யப் படும் என்கிறார்கள். இதை ஐபிசி யில் செய்வது அவ்வளவு எளி தல்ல. இதை விட, ஏற்கனவே ஐபிசியில் உள்ள பெண்கள் பாதுகாப்பிற்கான சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கலாம்.

ஏற்கனவே பல சமூகங்கள் ஒதுக்கீடு கோரி வரும் நிலையில் திருநங்கைக்கு எனத் தனியாக ஒதுக்கீடு அளிப்பது சாத்தியமா?

குறிப்பிட்ட சமூகத்தினருக்காக ஒதுக்கீடு வழங்கும்போது அதில் இரு சதவீதத்தை திருநங்கைக்காக ஒதுக்க வேண்டும் என்பது எனது வாதம் ஆகும்.

இப்படி ஒரு எண்ணம் மத்திய அரசிற்கு இருக்கும் எனும் போது, உங்கள் மசோதா மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது எப்படி?

பெரியார் கூறியபடி, யாரும் செய்யாததை நான் செய்ய வில்லை. ஒரு அரசு செய்யத் தவறி யதைத்தான் நான் செய்திருக் கிறேன். எனவே, எனது மசோதா விற்கு ஆதரவளிக்காதவர்கள் திருநங்கைகள் விரோதிகள் என் றாகி விடுவார்கள். இதுதான் ஆளும் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர் களும் எனக்கு ஆதரவு அளித்த தற்கு காரணம் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x