Last Updated : 27 Mar, 2015 11:47 AM

 

Published : 27 Mar 2015 11:47 AM
Last Updated : 27 Mar 2015 11:47 AM

2022-க்குள் எண்ணெய் இறக்குமதியை 10% குறைக்க திட்டம்: காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் - செல்வந்தர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

எரிபொருள் பயன்பாட்டில் தன்னிறைவை எட்டும் வகையில், வரும் 2022-ம் ஆண்டுக்குள் எண்ணெய் இறக்குமதி10 சதவீதம் குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயுவை சந்தை விலையில் வாங்கும் திறனுள்ளவர்கள் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எரிசக்தி தொடர்பான `உர்ஜா சங்கம்’ முதல் கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவின் எரிபொருள் தேவையில் தற்போது 77 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. வரும் 2022-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருப்போம். அப்போது, எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீதம் குறைக்க வேண்டும். அதற்குள் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். அதுவே நமது கனவு. இந்த இலக்கை நாம் அடைந்து விட்டால், வரும் 2030-ம் ஆண்டு நமது எண்ணெய் இறக்குமதி 50 சதவீதமாகக் குறைந்து விடும் என உறுதியாகக் கூறுகிறேன்.

2013-14-ம் நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக ரூ. 1,89,238 கோடியை இந்தியா செலவிட்டுள்ளது. இறக்குமதியைக் குறைப்பதற்காக, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

சமையல் எரிவாயுவை குழாய் மூலம் பயன்படுத்தும் வீடுகளின் எண்ணிக்கை தற்போது 27 லட்சமாக உள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்துவதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளன.

இதுவரை 2.8 லட்சம் வாடிக்கை யாளர்கள் வீட்டு உபயோக சமையல் எரிவாயுவுக்கான மானி யத்தை துறந்துள்ளதன் மூலம் அரசுக்கு ரூ.100 கோடி மிச்சமா கியுள்ளது. இந்தத்தொகை பள்ளிக் கல்வி மற்றும் மருத்துவ பயன் பாடுகளுக்காகச் செலவிடப்படும்.

சமையல் எரிவாயுவை சந்தை விலையில் வாங்கும் திறனுள் ளவர்கள், தயைகூர்ந்து மானி யத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நேரடி மானியத் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, ஏராளமானவர்கள் மானியமில்லா முறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஜன்தன் திட்டத்தின் கீழ் 12 கோடி வங்கிக் கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன. இதன்மூலம், மானி யங்கள் சேதம், முறைகேடின்றி உரிய பயனாளிகளைச் சென்றடை கின்றன.

ஊழலுக்கு எதிராகச் செயல்படுவதற்கு, அமைப்பு சார்ந்த நிர்வாகம், வெளிப்படைத் தன்மை, கொள்கை சார் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இது முறைகேடுகளைத் தவிர்க்கும். நேரடி மானியத்திட்டம் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவைச் சேர்ந்த பொது மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களாக உருவெடுக்க வேண்டும். எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தெற்காசிய பகுதிகளில் காலூன்ற வேண்டும். வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்க வேண்டும்.

எரிபொருள் துறையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் இளம் தலைமுறையும், திறன் மேம்பாட்டில் அரசு செலுத்தி வரும் கவனமும் எரிபொருள் துறையிலுள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை அரசு ஊக்குவித்து வருகிறது. தரிசு நிலங்களில் காட்டா மணக்கு சாகுபடியும் ஊக்குவிக்கப் படுகிறது. இவ்வாறு, மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x