உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பிளவு: சைக்கிள் சின்னத்துக்கு போட்டா போட்டி- தலைமை தேர்தல் ஆணையத்தில் முலாயம் மனு

உ.பி.யில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பிளவு: சைக்கிள் சின்னத்துக்கு போட்டா போட்டி- தலைமை தேர்தல் ஆணையத்தில் முலாயம் மனு
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற் பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தைக் கைப்பற்ற இருதரப்பும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் உ.பி. முதல்வராக உள்ளார். அகிலேஷுக்கும் அவரது சித்தப்பாவும் கட்சியின் மாநிலத் தலைவருமான சிவபால் யாதவுக் கும் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது.

இதன் உச்சகட்டமாக அகிலேஷ், இவரது ஆதரவாளரும் முலாயமின் மற்றொரு சகோதரருமான ராம் கோபால் யாதவை கடந்த 30-ம் தேதி கட்சியில் இருந்து நீக்கினார் முலாயம். எனினும், பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அகிலேஷுக்கு ஆதரவாக உள்ள தால், இருவரும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளரான ராம் கோபால் யாதவ் ஏற்கெனவே அறிவித்தபடி, கட்சியின் தேசிய மாநாடு லக்னோவில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து முலாயம் சிங் நீக்கப்படுவதாகவும் அகிலேஷ் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து சிவபால் யாதவ் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நரேஷ் உத்தம் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதுபோல முலாயமுக்கு மிகவும் நெருக்கமான அமர் சிங்கும் கட்சி யில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து, முலாயம் சிங் வெளியிட்ட அறிக்கையில், “ராம் கோபால் யாதவ் கூட்டிய மாநாடு சட்டவிரோதமானது. அவர் 6 ஆண்டு களுக்கு கட்சியில் இருந்து நீக்கப் படுகிறார்” என கூறப்பட்டிருந்தது.

இதனிடையே கட்சியின் சைக் கிள் சின்னத்தை தக்க வைத்துக் கொள்ள முலாயம் சிங், அமர் சிங் மற்றும் சிவபால் யாதவ் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். அங்கு தலைமை தேர்தல் ஆணையத் துக்குச் சென்றனர். அப்போது, சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கேட்டுக்கொண்டு மனு அளித்தனர். இதுபோல அகிலேஷ் தலைமையிலான குழு வினரும் சைக்கிள் சின்னத்தைக் கைப்பற்ற முயற்சி மேற்கொண் டுள்ளனர்.

இதனிடையே, கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறும்போது, “5-ம் தேதி நடைபெற இருந்த கட்சி மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது” என்றார்.

சிவபால் யாதவ் கூறும்போது, “சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவராக இப்போது வரை முலாயம் சிங்தான் நீடிக்கிறார். நான் இதுவரை அவருடன்தான் இருந்தேன். எனது இறுதி மூச்சு உள்ளவரையிலும் அவருடன்தான் இருப்பேன்” என்றார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அமர் சிங் செய்தியாளர் களிடம் நேற்று கூறும்போது, “முலாயம் சிங்குடன் நீண்டகால மாக இணைந்து பணியாற்றி வரு கிறேன். இனியும் அவருடன்தான் இருப்பேன். அவருடன் இணைந் திருந்ததால் ஹீரோவானேன். தேவைப்பட்டால் அவருக்காக வில்லனாக மாறவும் தயாராக உள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in