Published : 16 Jun 2016 09:32 AM
Last Updated : 16 Jun 2016 09:32 AM

தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காப்பாற்ற உதவியது ‘ஃபேஸ்புக்’

மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞரின் உயிரை காப்பாற்ற, ஃபேஸ்புக் சமூக வலைதளம் உதவியாக இருந்துள்ளது.

ஹரியாணா மாநிலம், குர்கான் நகரில் செக்டார் 10ஏ பகுதியில் வசிப்பவர் வருண் மாலிக் (32). மென்பொருள் பொறியாள ரான இவர், தனியார் நிறுவனத் தில் பணியாற்றி வருகிறார். திடீ ரென கடந்த செவ்வாய்கிழமை யன்று, தான் தற்கொலை செய்து கொள்வதாக, ஃபேஸ்புக் மூலம் அறிவித்தார்.

இடதுகை மணிக்கட்டில் கத்தி யால் கீறிக்கொண்டு, ரத்தம் வழிந் தோடும் காட்சியை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த தோடு, தற்கொலைக் குறிப்பு ஒன்றையும் பதிவிட்டார். இதைக் கண்ட அவரின் சமூக வலைதள நண்பர்கள், சம்பந்தப்பட்ட பகுதி யில் வசிக்கும் நண்பர்களுக்கு உடனடியாக தகவல்களை அனுப் பினர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் வருணின் வீட்டிற்கு செல்வதற்குள், வருணின் சகோதரர் விரைந்து சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றுவிட்டார். தனியார் மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக வருண் தற் கொலை குறிப்பில், ‘தீராத உள் மன போராட்டத்தின் காரணமாக வாழ்க்கையை முடித்துக் கொள் கிறேன். என் இறப்புக்கு யாரும் காரணமல்ல. எனக்கென்று யாருமில்லை. சாவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஒவ்வொரு சுவாசமும் எனக்கு சுமையாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தனது தாயின் மரணத்துக்குப் பிறகு வருண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக அவரின் நண்பர்கள் கூறுகின்றனர்.

வருண் தற்போதும் பேசும் நிலையில் இல்லாததால், காவல் துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை. காரணம் எதுவானாலும், தற்கொலை செய்ய முயன்ற ஒருவரை காப்பாற்ற சமூக வலைதளம் உதவிகரமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x