Last Updated : 11 Aug, 2016 01:33 PM

 

Published : 11 Aug 2016 01:33 PM
Last Updated : 11 Aug 2016 01:33 PM

போதிய நிதி ஒதுக்காமல் பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறி மாநிலங்களவையில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான பிரச்சினையை சமாஜ்வாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார்.

அவர் பேசும்போது, “உத்தரப்பிரதேச முதல்வர், தலைமைச் செயலாளர், பிற அமைச்சர்கள் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டனர் ஆனால், மத்திய அரசின் பங்களிப்பு உத்தரப்பிரதேசத்துக்கு அளிக்கப்படவேயில்லை. இங்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

வெள்ள நிவாரணம், புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித் தொகை, சாலை மேம்பாட்டு நிதி உள்ளிட்டவற்றுக்கான நிதியை பிரதமர் மோடி தலைமையிலான அரசு உத்தரப்பிரதேசத்துக்கு வழங்கவில்லை. இது என்ன அவர்களின் சொந்த அரசாங்கமா? அவர்கள் நிச்சயம் நிதி ஒதுக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நிதி வழங்கப்படும் என உறுதியளிக்காவிட்டால் அவையை நடத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து, சமாஜ்வாதி எம்.பி.க்கள், துணைத் தலைவர் இருக்கை அருகே ஒன்று கூடி அமளியில் ஈடுபட்டனர். பிஹாரும் இதேபோன்று பாரபட்சமாக நடத்தப்படுவதாகக் கூறி ஜனதா தளம் தலைவர் சரத் யாதவும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

“பயிர்க் காப்பீடு திட்டத்தை பிஹாரில் மத்திய அரசு அமல்படுத்தவில்லை” என ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. அலி அன்வர் அன்சாரி குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி பேசும்போது, “பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங் களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை” என்றார்.

அமளி தொடர்ந்ததால், துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் அவையை 15 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். அவை மீண்டும் கூடிய பிறகும் அமளி தொடர்ந்தது. எனவே, அவை 12 மணி வரை ஒத்தி வைக் கப்பட்டது. அவையில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இத னால், அவை மூன்றாவது முறை யாக, 12.30 மணிவரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்திவைக் கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x