Last Updated : 27 Jul, 2016 10:51 AM

 

Published : 27 Jul 2016 10:51 AM
Last Updated : 27 Jul 2016 10:51 AM

ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு தளர்வு: அனந்த்நாகில் மட்டும் நீடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 17 நாட்களாக நீடித்திருந்த ஊரடங்கு உத்தரவு அனந்த்நாக் நகரம் தவிர அனைத் துப் பகுதிகளிலும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்கான வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வன் முறை வெடித்தது. இதில், 2 போலீஸ்காரர்கள் உட்பட 47 பேர் கொல்லப்பட்டனர், 5500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர கடந்த 9-ம் தேதியிலிருந்து காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 17 நாட்கள் தொடர்ந்த தடையுத்தரவு , நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “அனந்த்நாக் நகரைத் தவிர காஷ்மீரின் அனைத்துப் பகுதி களிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டது. எனினும், சட்டம் ஒழுங் கைக் கட்டுப்படுத்துவதற்காக சில பகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடு வதற்கு கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது” என்றார்.

அதேசமயம் மொபைல் சேவைகள், இணையம், ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது தொடர்கிறது. பிரிவினை வாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நவ்காம் பகுதியில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகே நேற்று தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்தது. இதில், நான்கு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் ஒருவர் பிடிபட்டார்.

“தீவிரவாதிகள் அனைவருமே வெளிநாட்டவர்கள். இது ஊடுரு வல் முயற்சியா என விசாரித்து வருகிறோம்” என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x