காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் பலி

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 4 வீரர்கள் பலி
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

“நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணியளவில் இந்திய ராணுவத்தின் 3 லடாக் ஸ்கவுட் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, பெரிய அளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர். இதில், சேவங் நுர்பு, டோர்ஜாய் கியால்ட்சன், முகமது யூசுப், ஜிக்மெய்ட் ஜோஸ்டுப் ஆகிய நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்” என, உதம்பூர் பாதுகாப்புப் படை பிரிவு செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ்.டி. கோஸ்வாமி தெரிவித்தார்.

பனிச்சரிவு ஏற்பட்டதும் மீட்புப் பணி துரிதமாக நடந்தது. இருப்பினும் நால்வரை யும் உயிருடன் மீட்க முடியவில்லை. அவர்களின் உடல்கள் பிரேதபரிசோ தனைக்காக இந்தார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in