

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். தீவிரவாதிகள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் பகுதி யில் தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்புப் படையின ருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு அருகே பதுங்கி யிருந்த தீவிரவாதிகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே சில மணி நேரம் மோதல் நீடித்தது.
இதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். எல்லைப் பாது காப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்களும் இந்த சண்டையில் பலியாகினர். படுகாயமடைந்த 5 வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதற்கிடையே, காஷ்மீர் பகுதி யில் நேற்று 31-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் ஊரடங்கு மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் காரணமாக, பள்ளி கள், கல்லூரிகள், வர்த்தக நிறு வனங்கள், பெட்ரோல் வினியோக நிலையங்கள் போன்றவை மூடப் பட்டிருந்தன.
பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
காஷ்மீர் பகுதிகள் முழுவதி லும், பிரிவினைவாதிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம், 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.