

காஷ்மீர் மாநிலம் பெமினா ராணுவ முகாம் அருகே பயங்கராவாதிகள் குக்கரில் பதுக்கிவைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை ராணுவத்தினர் கைப்பற்றி பத்திரமாக செயலிழக்கச் செய்தனர்.
பெமினா பகுதியில் இன்று காலை 151 படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ராணுவ முகாம் அருகே சாலையோரத்தில் ஒரு பை இருந்ததை கவனித்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து மர்ம பையை கைப்பற்றினர். பின்னர் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையிலான சக்தி வாய்ந்த வெடிகுண்டை பத்திரமாக செயலிழக்கச் செய்தனர்.
ஜம்முவில் ராணுவ சீருடையில் வந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நேற்று நடத்திய இரு துணிகர தாக்குதல்களில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ராணுவ முகாம் அருகே வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.