Published : 26 Sep 2013 10:32 AM
Last Updated : 26 Sep 2013 10:32 AM

பாராமுகமாய் மோடியை ஆசிர்வதித்த அத்வானி

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் "காரியகர்த்தா மகா கும்பமேளா" நிகழ்ச்சி பாரதிய ஜனதா சார்பில் புதன்கிழமை தொடங்கியது. பாரதிய ஜனசங்கத்தை தோற்று வித்தவர்களுள் ஒருவரான பண்டித தீனதயாள உபாத்யாயாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின்னர் மோடியும், அத்வானியும் ஒரே மேடையில் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால் பெரும் எதிர் பார்ப்பு நிலவியது.

மேடையில் இருவரும் சந்தித்த போது, வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டனர். எனினும் அது இயல் பானதாக இல்லை.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இரு வருக்கும் பூங்கொத்துகளை அத் வானி வழங்கினார்.

அத்வானியிடம் ஆசி பெறுவதற் காக, அவரின் காலைத் தொட்டு வணங்க சிவராஜ் சிங் சௌகான் முற்பட்டார். அதற்கு உடனடியாக குனிந்து அவரைத் தொட்டுத் தூக்கி அத்வானி ஆசிர்வதித்தார்.

ஆனால், மோடி ஆசிர்வாதம் பெறுவதற்காக குனிந்த போது, கைகளைப் பிரித்து ஆசிர்வதிக்க வில்லை. மோடியைப் பார்க்கக்கூட இல்லை. நாடு முழுவதும் பொதுக்கூட்டIங்களில் பங்கேற்று சொற்பொழிவாற்றி மோடி பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அது தொடர்பாகவும் தனது கருத்தை அத்வானி பதிவு செய்தார்.

அத்வானி பேசியதாவது: இந்திய அரசியலில் தற்போதைய இடத்தைப் பாஜக பிடித்திருப்பதற்கு நாவன்மை மிக்க பேச்சு காரணம் அல்ல. கடுமையான உழைப்பும், தொண்டர்களின் தியாகமும்தான் காரணம். சொல்லாட்சி மிக்க வெறும் பேச்சினால் மட்டும் நம்மால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. கடுமையான உழைப்பினால் வெற்றி பெறுவது சாத்தியமாகும்.

பாஜக எப்போதும் எதிர்க்கட்சி யாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முடிவு கட்டுங்கள். வரும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனது முந்தைய சாதனை களுக்காக வெற்றி பெறும். வேறு எந்தக் கட்சியையும் பாஜகவுடனோ, தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனோ ஒப்பிட முடியாது.

நமது வெற்றி வெறும் பேச்சின் காரணமாக இருக்காது. ஏற்கெனவே நாம் சாதித்தவைகள், நமது தலைமை, நமது செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றியைப் பறிப்போம்.

மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்யும் திறனை எத்தனை மாநிலங்கள் கொண்டுள்ளன. முதலில் குஜராத்தில் மோடி சாதித்தார். மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சௌகானும், சட்டீஸ்கரில் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசும் சாதித்தன.

வேறு எந்த மாநிலத்திலும் 24 மணி நேரமும் தடையற்ற மின்விநியோகம் செய்யப்படுவதில்லை இவ்வாறு அத்வானி பேசினார்.

அத்வானி தனது பேச்சினிடையே, மோடி பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டது பற்றிக் குறிப்பிட்டார். கட்சி மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி யுள்ளது என்றார்.

கூட்டத்தினர் தொடர்ந்து மோடியை வாழ்த்திக் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்ததால், அத் வானி தனது உரையை விரைவாக முடித்துக் கொண்டார்.

ராஜ்நாத் சிங் பேசும்போது, "பாஜக தொண்டர்கள் கீழ்மட்ட அளவில் கடுமையாக உழைக்க வேண்டும்.

அப்போதுதான் மோடி நாட்டின் பிரதமராகவும், சிவராஜ் சிங் சௌகான் மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகவும் வர முடியும்" என்றார்..

உமா பாரதி பேசுகையில் "மோடிக்கும், சிவராஜ் சிங் சௌ கானுக்கும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்" என்றார். முன்னதாக பாஜக தலைவர்கள் அனைவரும் மலர்மாலை அணிந்தபடி ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை எடுக்க பாஜக நிர்வாகிகள் விரும்பினர். மோடி அருகில் அத்வானி நின்ற போதும் பெரிய இடைவெளி காணப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வந்து நின்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x