

டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர்.
தென் கிழக்கு டெல்லியில், ஜசோலா எனும் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இன்று காலை 11.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் தீப்பற்றியது.
இதனையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.
வீடு முழுவதுமாக சேதமடைந்திருந்தது. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் வந்தனர்.
தீயில் கருகிய நிலையில் ஆறு பேர் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புப் படை இயக்குநர் ஏ.கே.சர்மா தெரிவித்துள்ளார்.