

மணிப்பூரில் 16 ஆண்டுகளாக தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டு தீவிர அரசியலில் குதிக்க போவதாக அறிவித்த இரோம் ஷர்மிளாவுக்கு தங்குவதற்கு இடமில்லா சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக ஷர்மிளாவின் உதவியாளர், “இரோம் ஷர்மிளா உண்ணவிரதப் போராட்டத்தை கைவிட்டதற்கு பிண்ணனியில் காரணம் உள்ளது என்று கூறி இர்ரோம் ஷர்மிளாவுக்கு இடமளிக்க மறுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எதிர்ப்புகளும் ஆதரவுகளும்
இரோம் ஷர்மிளாவின் அரசியலில் ஈடுபடும் முடிவுக்கு மணிப்பூரில் ஆதரவுகளும், எதிர்ப்புகளும் உருவாகியுள்ளன.
இர்ரோம் ஷர்மிளாவின் உண்ணா விரதத்தை திரும்ப பெற்ற முடிவு மணிப்பூரை இரண்டாக பிரிக்க வழி செய்யும் என மணிப்பூரின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் மாலென் நிங்தோஜீவா, இர்ரோம் ஷர்மிளாவின் அரசியல் பிரவேச முடிவு குறித்து 'தி இந்து'விடம் கூறியபோது “மணிப்பூர் மக்கள் இந்திய அரசியலமைப்பில் நம்பிக்கையற்றவர்கள். ஆனால் ஷர்மிளா மக்களின் நம்பிக்கை இழந்த அரசியல் தளத்தில்தான் இறுதியில் சேர்திருக்கிறார்” என்றார்.
மேலும் மனித உரிமை செயல்பாட்டாளர் லாயிடோங்பாம் கூறும்போது, “தனது 16 வயதில் மணிப்பூரில் ஆயுதப்படைக்கு எதிராக இர்ரோம் ஷர்மிளா மேற்கொண்ட உண்ணவிரதப் போராட்டத்தை பார்த்து பலரும் சிரித்தனர். ஆனால் இன்று இர்ரோம் ஷர்மிளா இரணுவ படைக்கு எதிரான அடையாளமாக நாடு முழுவதும் அடையாளப்படுத்தபடுகிறார். யாருக்கும் தெரியும் அடுத்த ஐந்து வருடத்தில் அரசியலில் எந்த நிலையில் இருப்பார்” என்று கூறினார்.