உத்தரபிரதேசம், உத்தராகண்ட் தேர்தலில் பாஜக அமோக வெற்றி: மக்களவையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம், உத்தராகண்ட் தேர்தலில் பாஜக அமோக வெற்றி: மக்களவையில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Updated on
2 min read

சிகிச்சைக்குப் பிறகு நாடாளுமன்றத்துக்கு வந்தார் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, மக்களவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு நேற்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுபோல சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு 3 மாதங்களுக்குப் பிறகு மக்கள வைக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சக அமைச்சர்கள் வரவேற்றனர்.

5 மாநில தேர்தல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. இதில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதுபோல, கோவா, மணிப்பூரிலும் சிறிய கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.

தேர்தல் முடிவு வெளியான பிறகு முதன்முறையாக நேற்று நாடாளுமன்றம் கூடியது. அப் போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தபோது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேசையைத் தட்டி அவருக்கு உற்சாக வாழ்த்து தெரி வித்தனர். மோடி தனது இருக்கை யில் அமர்ந்த பிறகும் சில விநாடி கள் வரை உறுப்பினர்கள் தொடர்ந்து மேசையை தட்டினர். சிலர் ‘பாரத மாதாவுக்கு ஜே’ என கோஷமிட்டனர்.

பாஜக உறுப்பினர்கள் மட்டு மல்லாது, பிஜு ஜனதா தளம் உறுப் பினர் வைஜெயந்த் பாண்டாவும் மேசையைத் தட்டினார். மேலும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் ஜிதேந்தர் ரெட்டி, மோடியிடம் சென்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில், நிதி யமைச்சரின் வருகைக்காக புகைப் படக் கலைஞர்கள் நாடாளுமன்றத் தின் பிரதான நுழைவு வாயிலில் ஆவலுடன் காத்திருப்பது வழக்கம்.

ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதங் களுக்குப் பிறகு நாடாளுமன்றத் துக்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வரவேற்பதற்காக புகைப்படக் கலைஞர்களும் செய்தி யாளர்களும் நேற்று ஆவலுடன் காத்திருந்தனர்.

பச்சை நிற புடவை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த சுஷ்மாவுக்கு சக அமைச்சர் உமா பாரதி வாழ்த்து தெரிவித்தார். மக்களவைக்கு வந்தபோது, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் சுஷ்மாவை வாழ்த் தினர். அப்போது, அவையில் இருந்த அனைவரும் கையைத் தட்டி உற்சாகமாக அவரை வரவேற்றனர்.

அப்போது, சுஷ்மா பேசும் போது, “எனக்கு வாழ்த்து தெரி வித்த மக்களவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆசீர்வாதம் மற்றும் கிருஷ்ணர் மீதான எனது நம்பிக்கையால் பூரண குணமடைந்து நான் இங்கு திரும்பி வந்துள்ளேன்” என்றார்.

பின்னர் அமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “இந்தியரான நிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் கொல்லப்பட்டது தொடர்பாக மக்களவையில் நடந்த விவாதத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காப்பதாக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலீமும் குற்றம் சாட்டினர். இந்தியர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் அரசு எப்போதும் அமைதியாக இருந்ததில்லை.

பிரதமர் மோடி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட் டிருந்தபோதும், குச்சிபோட்லா குடும்பத்தினரைப் பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தார். நானும் குச்சிபோட்லாவின் மனைவி மற்றும் தந்தையுடன் பேசினேன். அவர்கள் இந்திய தூதரகத்துக்கு நன்றி தெரிவித்து இ-மெயிலில் கடிதம் எழுதினர் (படித்துக் காட்டினார்)” என்றார்.

பின்னர் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கூறும்போது, “கம்பீரமான உங்கள் குரல் அவையில் மீண்டும் ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in