Published : 14 Feb 2016 12:26 pm

Updated : 13 Jun 2017 18:28 pm

 

Published : 14 Feb 2016 12:26 PM
Last Updated : 13 Jun 2017 06:28 PM

பல்கலை. மாணவர்களை புரிந்து கொள்ளுமா மத்திய அரசு?

கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அம்பேத் கரை பற்றி காந்தி கூறும்போது, ‘‘அவர் தனது கசப்புணர்வை வெளியிட எல்லா உரிமையும் உள்ளது’’ என்றார். அவருக்கும் அவரது சமூகத்தினருக்கும் இழைக் கப்பட்ட கொடுமைகளால், கடுமை யான சொற்களால் விமர்சனம் செய்ய அம்பேத்கருக்கு அதிகாரம் உள்ளது என்பதுதான் அதன் பொருள்.

அதை நினைத்து பார்க்கிறேன். இப்போது இன்னொரு கல்லூரி யில் நடந்த போராட்டம் மத்தி யில் ஆளும் பாஜக அரசின் கோபத்துக்கு ஆளாகி உள்ளது. அப்சல் குருவை தூக்கிலிட்டதை கண்டித்து ஜவஹர்லால் நேரு பல்லைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அதனால் மாணவர்கள் மீது தேச துரோக வழக்கை டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ளனர். தேச துரோகம் என்பது, அரசுக்கு எதிராக பேசுவது, எழுதுவது, செயல்களில் ஈடுபடுவது. அதை செய்யும்படி மற்றவர்களை தூண்டுவது.


அதன்படி, ‘‘ஜேஎன்யூ மாணவர் கள் தேசத்துக்கு எதிராக செயல் படுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கிழக்கு டெல்லி பாஜக எம்.பி. மகேஷ் கிரி போலீஸில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள் ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். அதன் அடிப்படையில் ஜேஎன்யூ மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் பல்கலைக்கழகத் தில் நடந்தது போலவே ஜேஎன்யூ மாணவர்களுக்கும் நடந்துள்ளது. யாகூப் மேமனை தூக்கிலிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஹைதராபாத் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் உச்சகட்டமாக தலித் மாணவர் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கு தண்டனையை எதிர்த்து ஹைதராபாத்தில் தலித் மாணவர் கள் ஏன் போராடினார்கள்? ஜேஎன்யூ.வில் முஸ்லிம்கள் மீது கவனம் சென்றது ஏன்? விசாரணை நடத்த அமைக்கப்பட்ட கமிட்டி யில், ஒதுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்து வம் அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் ஏன் வலியுறுத்து கின்றனர்? உண்மை என்னவென் றால், இந்தியாவில் தலித்துகளுக் கும் முஸ்லிம்களுக்கும் மட்டும்தான் பெரும்பாலும் தூக்கு என்ற நிலை உள்ளது.

தேசிய சட்ட பல்கலைக்கழகம் இது குறித்து நடத்தி வரும் ஆய்வு இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிகி றது. இதுவரை வெளிவந்த புள்ளி விவரங்களின்படி, தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக 75 சதவீதம் தலித்து களும் 93.5 சதவீதம் முஸ்லிம் களும்தான் தூக்கிலிடப்பட்டுள் ளனர். ஆனால், உயர்ஜாதி இந்துக்கள் தீவிரவாதத்தில் ஈடுபடும் போது மத்திய அரசு இந்தளவுக்கு கடுமை காட்டுவதில்லை.

மாலேகான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பியாந்த் சிங்கை தூக்கிலிட வில்லை. அதேபோல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தவர்களுக்கும் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டது. ஆனால், அதே சட்டத்தை அவர் களுக்கு பயன்படுத்தவில்லை. 95 குஜராத்திகளை கொன்ற மயாபென் கோட்நானி, சிறை தண்டனை கூட அனுபவிக்கவில்லை.

இரண்டாவது பிரச்சினை பொரு ளாதார ரீதியிலானது. தலித்துகளும் முஸ்லிம்களும் ஏழைகள். விசாரணை நீதிமன்றத்தில் அப்சல் குருவுக்காக வாதாட சட்டப்பூர்வ உதவிகள் கூட கிடைக்கவில்லை. இந்த உண்மைகளை எல்லாம் அறிந்தால், தலித்துகள், முஸ்லிம் கள், அவர்களது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது நமக்கு ஆச்சரியம் அளிக்காது.

அவர்கள் தங்கள் பிரச்சினை களை எடுத்துரைக்க எல்லா உரிமையும் உள்ளது. அவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்பவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் உண்மையை கூறுகின்றனர். உண்மையில் உணர்ச்சி வசப்பட்டது பாஜக எம்.பி. மகேஷ் கிரிதான்.

நாம் எல்லாம் உயர் ஜாதியினர். நாம்தான் இந்த சமூகம். நமது கொள்கைகளை மற்றவர்கள் ஏற்க வேண்டும். இந்துத்துவாவில் இருப் பவர்கள் யார் என்றால் நடுத்தர வகுப்பினரும் உயர்ஜாதியினரும் தான் என்ற எண்ணம். அதனால் தான் அவர்கள் இடஒதுக்கீட்டையே வெறுக்கின்றனர்.

தலித்துகள் குரல் எழுப்புகின் றனர். தங்கள் உரிமைகளுக்காக போராடுகின்றனர். இதில் தவறு ஏதும் இல்லை. அவர்கள் வரம்புமீறி பேசினாலும், அதற்காக அவர்களை கிரிமினல்கள் போல நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை அழைத்து பிரச்சினைகளை கேட்டறிய வேண்டியது அரசின் கடமை. அவர்களுடைய கோஷங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், அவர்களுடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.

நான் முதலில் கூறியபடி காந்தியின் விவேகத்தை இந்தப் பிரச்சினையுடன் ஒப்பிட்டு பாருங்கள். இந்த விஷயத்தில் நாம் கொஞ்சமாவது முதிர்ச்சி நிலையை காட்ட வேண்டும். அதை அரசு செய்யாத வரையில், சமூகத்தில் நாம் யாரை அடக்கி வைக்கிறோமோ அவர்கள் அரசுக்கு எதிராக எழுதுவதும் பேசுவதும் செயலில் ஈடுபடுவதும் தொடரும். இதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


பல்கலைக்கழக மாணவர்கள்மத்திய அரசுகடும் நடவடிக்கைதலித் மாணவர் வெமுலா தற்கொலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x