

நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது. இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. எனினும் அவசர தேவையை கருதி நவம்பர் 11-ம் தேதி வரை மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பால் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில்வே, பஸ் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள், அரசு கூட்டுறவு அங்காடிகளில் மட்டும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதனால், கருப்பு பணம் ஒழிப்பு சாத்தியமா? நீங்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்கள் என்ன? மக்கள் இந்த நடவடிக்கையை எப்படி அணுக வேண்டும்?
நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை 3 நிமிடங்களுக்கு மிகாமல் வீடியோவாக எடுத்து 9597958840 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது tamilthehindu@gmail.com (கூகுள் டிரைவ் வழியில்) மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
உங்கள் பெயர், ஊர், தொழில் ஆகிய குறிப்புகளைச் சொல்லிவிட்டு, உங்கள் கருத்துகளை வீடியோவில் பதிவு செய்து அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் வீடியோக்கள் கீழ்க்கண்டது போல் 'தி இந்து'வின் 'நெட்டிசன்ஸ் டாக்' தொகுப்பாக யூடியூபில் வெளியிடப்படும்.
அல்லது, வழக்கம் போல் உங்கள் கருத்துகளை கீழேயுள்ள கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.