Last Updated : 07 Sep, 2016 08:15 AM

 

Published : 07 Sep 2016 08:15 AM
Last Updated : 07 Sep 2016 08:15 AM

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மறு சீராய்வு மனு: சித்தராமையா அறிவிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமி ழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதேநேரம் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் படும் என்றும்‌ கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக்கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், செப் டம்பர் 5-ம் தேதியில் இருந்து அடுத்த‌ 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடிநீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாய அமைப்புகளும், கன்னட அமைப் பினரும் மண்டியாவில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத் தினர். இதனால் பயணிகளும், சுற்று லாவாசிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் சித்தராமையா, நேற்று அமைச்ச ரவை கூட்டத்தை கூட்டி சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத் தினார். இதையடுத்து, கர்நாடக சட்ட அமைச்சர், காவிரி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது உச்ச நீதிமன்ற உத்த ரவு குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீர்வ ளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத்துறை அமைச்சர் டி.பி. ஜெயச்சந்திரா, உள்துறை அமைச் சர் பரமேஷ்வர், மத்திய அமைச் சர்கள் அனந்தகுமார், சதானந்த கவுடா, முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி (காங்கிரஸ்), ஜெகதீஷ் ஷெட்டர் (பாஜக), குமாரசாமி (மஜத) உட்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள், எம்எல்ஏக் கள்,எம்எல்சிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவு, கர்நாடக விவசாயிகளின் போராட்டம், தமிழக அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட் டது. அனைத்துக்கட்சி தலை வர்களின் ஆலோசனையைக் கேட்டறிந்த பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து முதல்வர் சித் தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

கர்நாடகாவில் இந்த ஆண்டில் பருவமழை பொய்த்ததால், அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் இறுதிவரை தமிழகத்துக்கு காவிரியில் 33 டிஎம்சி நீரை வழங்கி இருக்கிறோம். கர்நா டக அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு கூ டுதலாக நீர் தர முடியாத சூழல் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். கர்நாடகாவின் அனைத்து சிரமங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இருப்பினும் உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை மதிக்கும் வகையில் தமிழகத்துக்கு காவிரி நீரை முறைப்படி திறந்துவிட்டுள்ளோம். அதேபோல கர்நாடக விவசாயி களுக்கும் பாசனத்துக்கும், குடிநீ ருக்கும் காவிரி நீரை திறந்துவிட முடிவு செய்துள்ளோம். எனவே கர்நாடக மக்கள் எதற்கும் கவ லைப்படாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் குறித்து கர்நா டகா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தமிழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக அரசு பதில் மனு அளித்ததும், கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யும். அதன் மூலம் காவிரி விவகாரத்தில் நல்ல முடிவு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள் ளனர்.

இதுதவிர உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பில் சில மாற்றங்களை கோர முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் போதிய நீர் இல்லாததால் 10 நாட் களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை திறக்க முடியாத நிலை இருக்கிறது. எனவே வினா டிக்கு 10 ஆயிரம் கன அடி நீரை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோர முடிவு செய்யப்பட்டுள் ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத் தில் விரைவில் மனு தாக்கல் செய்வார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக் கும் வகையில் கர்நாடக விவசா யிகளும், கன்னட அமைப்பினரும் அமைதி காக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்படக் கூடாது. பொதுச்சொத் துக்களை சேதப்படுத்தக் கூடா து. வன்முறையை தூண்டும் வகையில் போராட்டங்களை நடத்தக்கூடாது. கர்நாடகாவுக்கு நீதி கிடைக்க முழுமையான அளவில் சட்ட ரீதியாக‌ போராடி வருகிறோம். எனவே அனைவ ரும் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x