

சத்தீஸ்கரில் நக்சல் கமாண்டர் ஒருவர் போலீஸாரிடம் சரணடைந்த்தார்.
தண்டேவாடா மாவட்டத்தில் நக்சல் படைப்பிரிவில் இருந்த சுக்ராம் காவ்டே (22), நக்சல் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பலர் தன்னை தரக்குறைவாக நடத்தியதாகவும், இயக்கத்தின் கொள்கைகளில் பிடிப்பில்லாமல் போனதாலும் சரணடைவதாக தெரிவித்தார்.
தாண்டேவாடா எஸ்.பி, கம்லோச்சன் காஷ்யப் முன் அவர் சரணடைந்தார். சுக்ராம் காவ்டேவை பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சுக்ராம் காவ்டே தாமாகவே முன் வந்து சரணடைந்தார்.