டைம்ஸ் சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் மோடிக்கு இடம்

டைம்ஸ் சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் மோடிக்கு இடம்
Updated on
1 min read

2013-ஆம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் பாஜக பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில், இதுவரை மோடிக்கு 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 25% வாக்குகளுடன் மோடி முதலிடத்தில் உள்ளார். ஆன்லைனில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள், தொழில் முனைவோர், பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த 42 பேரில், 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது.

இந்தப் பட்டியலில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி, அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் " சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநிலத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவியிழக்கச் செய்யும் வேட்பாளராக கருதப்படுபவர்" என டைம்ஸ் இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in