

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என, பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பாபர் மசூதியா, ராமர் கோயிலா என்ற விவாதம் தேவையற்றது. கோயிலின் கட்டுமானத்தை எதிர்த்தவர்கள் இப்போது ராமர் பக்தர்களாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் முஸ்லிம் சமூகத்தினரும் ஆர்வமாக உள்ளனர். எனவே, பூமியில் உள்ள எந்தஒரு சக்தியாலும் ராமர் கோயில் கட்டுவதைத் தடுத்துவிட முடியாது'' எனக் கூறினார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மூத்த ஹிந்துத்துவா தலைவர் ராம் விலாஸ் வேதாந்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அயோத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் கட்டப்பட்ட கட்டுமானத்தின் மாடத்தை கீழே தள்ளியவர்களில் நானும் ஒருவன்'' என்றார்.