மோடிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது: ஷிண்டே

மோடிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது: ஷிண்டே
Updated on
1 min read

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார்.

பாட்னாவில் மோடி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததன் தொடர்ச்சியாக, மத்திய அரசு இந்த விளக்கம் அளித்துள்ளது கவனத்துக்குரியது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசு போதுமான பாதுகாப்பை அளித்துள்ளது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோவால், 24 மணி நேரமும் இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "பாட்னாவுக்கு நாளை ஆய்வு செய்வதற்காகச் செல்கிறேன். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதால், குண்டுவெடிப்பு குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது.

பாட்னாவில் காயமடைந்த ஒருவர், இந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதன் எதிரொலியாக, அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, பிகார் தலைநகர் பாட்னாவில், மோடியின் பொதுக்கூட்டம் அருகே அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டதும், ஏறத்தாழ 80 பேர் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in