Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM

புதுவையில் கடலோர காவல்படை விமானங்கள் விரைவில் இயக்கம்

கடலோரக் காவல் படை சார்பில் புதுவையிலிருந்து விரைவில் ரோந்து விமானங்கள் இயக்கப்படும் என கமாண்டன்ட் என்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இந்திய கடலோரக் காவல்படை 38-வது அமைப்பு தின விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா பரிசளித்துப் பேசினார். முதல்வர் என்.ரங்கசாமி, மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி கலந்து கொண்டனர்.

விழா முடிந்த பின்னர் கமாண் டன்ட் சோமசுந்தரம் கூறியதாவது:

லாஸ்பேட்டை விமான நிலையத் தில் இருந்து ரோந்து விமானங்கள் இயக்கப்படும். முதல்கட்டமாக 2 டோர்னியர் விமானங்கள், 2 சேட்டக் ஹெலிகாப்டர்கள் புதுவை விமான தளத்தில் நிலை நிறுத்தப்படும்.

இதன் மூலம் புதுவை, காரைக் கால் பகுதிகளில் அதிகபட்ச ரோந்து பணியை மேற்கொள்ள முடியும். தற்போது கடலோரக்காவல் படை ரோந்து விமானங்கள் சென்னையில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இவை புதுவை, காரைக்கால்,பாக் ஜலசந்தி வரை சென்று திரும்புகின்றன.

டோர்னியர் விமானத்தை, தொடர்ந்து 6 மணி நேரம் இயக்க முடியும். இடையில் எரி பொருளை நிரப்ப 2 மணி நேரம் தேவைப் படும்.

சென்னையில் இருந்து இயக்கப் பட்டதால் இதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. புதுவையில் இருந்து இயக்கப்பட்டால் இப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த லாஸ்பேட்டை விமான நிலையத்தில் 8000 சதுர மீட்டர் இடத்தைக் கடலோரக் காவல்படை தன் வசம் எடுத்துள்ளது.

மேலும் புதிய கலங்கரை விளக்கம் அருகே நிறுத்தப்பட்டுள்ள 2 ஹோவர்கிராப்ட் இயந்திரங்களும் 2 மாதங்களில் நிரந்தரமாக நிலை நிறுத்தப்படும் என்றார் சோம சுந்தரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x