Last Updated : 06 Jun, 2016 05:31 PM

 

Published : 06 Jun 2016 05:31 PM
Last Updated : 06 Jun 2016 05:31 PM

பிரதமராகும் விருப்பம் இல்லை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்

அடுத்த பொதுத்தேர்தலில் பாஜக அல்லாத முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்படலாம் என்ற ஊகங்களுக்கு இடையில், தனக்கு பிரதமராகும் விருப்பம் இல்லை என்று பிஹார் முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதிஷ் குமார் கூறியதாவது:

ஒரே ஒரு முறை வாழ்க்கையில் எம்.பி. ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன், அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆகும் கனவை நான் ஒருபோதும் ஊட்டி வளர்த்ததில்லை.

சிலர் எனது புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயற்சி செய்து வருகின்ரனர், அதனால் ஒரு போதும் பிரதமராகும் விருப்பம் எனக்கில்லை. எனக்கு அப்படிப்பட்ட நோக்கமோ விருப்பமோ இல்லாத போது அவர்கள் தேவையில்லாமல், பயனற்ற வகையில் எனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

என்று நிதிஷ் குமார் பாஜக-வின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார்.

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவத காங்கிரஸ் கட்சியின் ஷரத் பவார், முன்னாள் ஜார்கண்ட் முதல்வர் பாபுலா மராண்டி ஆகியோர் நிதிஷ் குமார் நாட்டின் பிரதமராவதற்கு தகுதியும் திறமையும் படைத்தவர் என்று புகழ்ந்து பேசியுள்ளனர்.

ஆனால் பாஜக கூட்டணி கட்சிகள் இதனையடுத்து நிதிஷ் குமார் மீது பல்வேறு விதமான அவதூறுகளையும் விமர்சனங்களையும் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x