தொழிலதிபர்களுக்குதான் ‘நல்ல காலம்’ விவசாயிகளுக்கு ‘கெட்ட காலம்’ :ராகுல் காந்தி பிரச்சாரம்

தொழிலதிபர்களுக்குதான் ‘நல்ல காலம்’ விவசாயிகளுக்கு ‘கெட்ட காலம்’ :ராகுல் காந்தி பிரச்சாரம்
Updated on
1 min read

‘‘பிரதமர் மோடி சொன்ன ‘அச்சே தின்’ (நல்ல நாள்), தொழிலதிபர் களுக்குதான் உண்மையாகி உள்ளது. ஆனால், விவசாயிகள் கெட்ட நாளை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்’’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள பங்கலா கல்லூரியில் காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மோடி பிரதமர் பதவியேற்றதும் நாட்டு மக்களுக்கு ‘அச்சே தின்’ (நல்ல நாள்) வந்துவிட்டது என்றார். அது தொழிலதிபர்களுக்குதான் உண்மையில் நிறைவேறியுள்ளது. ஆனால், விவசாயிகள் தினம் தினம் கெட்ட நாளை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. அவர்கள் ‘அடக்க நாளை’ சந்திக்கின்றனர்.

விவசாயிகள் கடும் பண நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கத்தால் இங்குள்ள விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்போது, விவ சாயிகளின் வளர்ச்சிக்கு முன் னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in