

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் அந்த நாடு தனிமைப்படுத்தப்படும் என்று இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியது:
காமன்வெல்த் மாநாட்டை இலங்கை யில் நடத்த வேண்டும் என்பது ஒருமித்து எடுக்கப்பட்ட முடிவு. இதில் பங்கேற்காத நாடுகள் தனிமைப்ப டுத்தப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தலைவர் மட்டுமல்ல. ஆசியா, காமன்வெல்த், ஏன் உலகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார். இதை கருத்தில் கொண்டு இந்தியா முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து கடந்த வாரம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, மாநாடு நெருங்கும் தேதியையொட்டி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொழும்பில் நவம்பர் 15-ம் தேதி காமன்வெல்த் மாநாடு தொடங்குகிறது. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என கனடா அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.