

மேகாலயா மாநில ஆளுநர் வி.சண்முகநாதன், அருணாச்சல பிரதேச மாநில ஆளுநராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஜோதி பிரசாத் ராஜ்கோவா, கடந்த 12-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, இந்த மாநிலத்துக்கான ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு சண்முகநாதனை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, தலைநகர் இடாநகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங், சண்முகநாதனுக்கு அருணாச் சலப் பிரதேச ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, மாநில முதல்வர் பேமா காண்டு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.