

நைஜீரிய சிறையில் வாடிய 11 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார்.
வர்த்தக கப்பல் போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று கடந்த 2014-ம் நைஜீரியா கடல் பகுதியில் சிக்கித் தவித்தது. அதில் இருந்த மாலுமி கள் உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரும் நைஜீரிய அரசால் கைது செய்யப்பட்டனர். கடல் போக்குவரத்து தொடர்பான சர்வ தேச விதிகளை மீறியதாக இவர் கள் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலையாவதை விரைவு படுத்தியதற்காக நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதர் பி.என். ரெட்டிக்கு சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் வடமத்திய நைஜீரியாவின் கபோகோ நகரில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 2 இந்தியர்களை மீட்கவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ள தாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தை சேர்ந்த அனிஷ் சர்மா, ஆந்திராவை சேர்ந்த சாய் நிவாஸ் ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை தங்கள் குடி யிருப்பில் இருந்து டங்கோட் என்ற இடத்தில் உள்ள சிமென்ட் ஆலைக்கு காரில் செல்லும்போது, ஆயுதம் தாங்கிய கும்பலால் வழியில் கடத்திச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் சுஷ்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “அனிஷ் சர்மாவின் மனைவி யுடன் பேசினேன். அனிஷை பத்திரமாக மீட்க அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ள தாக அவரிடம் உறுதி அளித்துள் ளேன். இது தொடர்பான தகவல் கள் அனிஷ் குடும்பத்தினரிடம் அவ்வப்போது தெரிவிக்க உயரதி காரி ஒருவருக்கு உத்தரவிட் டுள்ளேன்” என்றார்.