நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: மன்னிப்பு கோரினார் ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான்

நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: மன்னிப்பு கோரினார் ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான்
Updated on
1 min read

வீட்டில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வரையிலான காட்சிகளை நேரலை செய்த மக்களவை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான் தனது செய்கைக்காக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. பக்வந்த் மான் தனது வீட்டில் புறப்பட்டது முதல் நாடாளுமன்றம் வந்து சேரும் வரையிலான காட்சிகளை நேரலை செய்தார்.

மேலும், நாடாளுமன்றத்தில் எழுப்படும் கேள்விகள் அடங்கிய தாள்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை விளக்கினார்.

நாடாளுமன்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதப்படும் இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தால் மாநிலங்களவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

சர்ச்சை வீடியோ தொடர்பாக நேரில் வந்து விளக்கமளிக்கும்படி பக்வந்த் மானுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், எம்.பி. பக்வந்த் மான் இன்று (வெள்ளிக்கிழ்மை) சபாநாயகர் சுமித்ரா மகாஜனை சந்தித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

ஆனால், சபாநாயகர் அவரது விளக்கத்தால் திருப்தியடையவில்லை என நாடாளுமன்ற வட்டாரம் தெரிவிக்கின்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in