பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்: தனியார் பேருந்துகள் பறிமுதல்

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல்: தனியார் பேருந்துகள் பறிமுதல்
Updated on: 
1 min read

தசரா விடுமுறையில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 27 தனியார் பேருந்துகளை ஆந்திர மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் தசரா விடுமுறையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.அதன்பேரில்,

நேற்று விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், நெல்லூர் மாவட் டங்களில் போக்குவரத்து அதிகாரி கள் ஆய்வு நடத்தினர். இதில் சரியான ஆவணங்கள்

இல்லாத மற்றும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 27 பேருந்து களுக்கு அபராதம் விதித்ததோடு, அந்த பேருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in