

கத்தோலிக்க கிறிஸ்தவ சபை சார்பில் அந்தந்த தேவாலயங்களில் தனி நீதிமன்றங்கள் செயல்படுகின் றன. இந்நிலையில் தேவாலய நீதி மன்றங்கள் வழங்கும் விவாகரத் துக்கு சட்ட அந்தஸ்து வழங்கக் கோரி கிளாரன்ஸ் பயஸ் என்பவர் கடந்த 2013-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதி சந்திர சூட் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில், தேவாலய நீதி மன்றங்கள் விவாகரத்து வழங்க அதிகாரமில்லை. குடும்பநல நீதிமன்றங்களும், இதர நீதி மன்றங்கள் மட்டுமே விவகாரத்து வழக்குகளில் தீர்ப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தனர். இறுதியில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.