இந்திரா, ராஜீவ் கொலைக்கு காங்கிரஸே காரணம் - வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு

இந்திரா, ராஜீவ் கொலைக்கு காங்கிரஸே காரணம் - வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு
Updated on
1 min read

இந்திராகாந்தியும் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸின் செயல்பாடுகள்தான் காரணம் என பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

“அரசியல் சுயலாபங்களுக்காக கோபத்தையும் வெறுப்பையும் தூண்டிவிடும் பாஜகவின் அரசி யல் செயல்பாட்டை நான் வெறுக் கிறேன். பாட்டி இந்திராகாந்தி, தந்தை ராஜீவ்காந்தி ஆகி யோரைப் போலவே நானும் கொல்லப்படுவேன் என்ற அச்சம் உள்ளது. ஆனால் அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை” என்று ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியிருந்தார்.

ராகுலின் இந்த ‘உயிர் பயம்’ பேச்சு ஆளுங்கட்சியினர் நம்பிக்கை யிழப்பு மற்றும் விரக்தி அடைந்த நிலையின் வெளிப்பாடு என பாஜக விமர்சித்துள்ளது. மேலும், காங்கிரஸின் செயல்பாடுகளே இது போன்ற செயல்கள் நிகழக் காரணம் எனவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் உயிர் பயம் குறித்த பேச்சு, அக்கட்சியினர் நம்பிக்கை இழந்துள்ளதையும், விரக்தி அடைந்துள்ளதையும் காட்டு கிறது. நரேந்திர மோடி பிரபல மடைந்து வருவதை காங்கிரஸ் காரர்களால் ஜீரணிக்க முடிய வில்லை. எனவே அவர்கள் தவ றான தகவலைப் பரப்ப முயற்சி செய்கின்றனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி, பாஜக, நரேந்திர மோடி ஆகியோ ரால் முன்னெடுக்கப்பட்ட மேம் பாட்டுத் திட்டங்களை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. அதற்கான நிர்வாகத் திறன் அவர்களிடத்தில் இல்லை. அவர்களின் தோல்விக்கு விளக்கம் அளிக்கவும் முடியவில்லை. இவற்றைத்தான் ராகுலின் பேச்சு வெளிப்படுத்துகிறது.

இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டதைச் சொல்லி அதன் மூலம் அனு தாபத்தைப் பெறும் முயற்சிதான் இது. இதுபோன்ற செயல்பாடுகள், நாட்டின் முன் உள்ள சவால்களுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்பதைக் காட்டுகிறது.

இது போன்ற சூழ்நிலை ஏற்படுவதற்கு யார் காரணம். பகைமை உணர்வைத் தோற்று வித்து, பிரிவினையை ஏற்படுத்தி, பிரிவினை எண்ணத்தை வளர்த்த தன் மூலம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்தது யார்? காங்கி ரஸ்தான் இதைச் செய்தது, இதற்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பு.

தேச விரோத சக்திகளுக்கு எதிராக மென்மையான போக்கைக் கையாண்டது காங்கிரஸின் குற்றம். பஞ்சாபில் அகாலிகளைப் பலவீனப்படுத்த பிந்ரன்வாலேவை வளர்த்தது காங்கிரஸின் குற்றம். முஸ்லிம் லீக்குடன் யார் கூட்டணி வைத்தது? ஒவாய்சி மற்றும் சகாபுதீனுடன் நட்புறவு கொண்டாடுவது யார்? இனவாத அரசியலை வளர்த்துவிட்டது யார்? இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை (ஐபிகேஎப்) அனுப்பி அங்கு நமது ராணுவ வீரர்கள் இறப்பதற்கு பொறுப்பேற்பது யார்? என வெங்கய்ய நாயுடு கேள்வியெழுப்பினார்.

பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் வளர்ச்சியடைந் துள்ளதற்கு காங்கிரஸின் கொள்கைகள்தான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in