

மத்தியபிரதேச மாநிலம் பிந்த் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டபோது எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் பாஜக வுக்கு வாக்கு விழுந்ததாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன் பிரகாஷ் கூறும்போது, ‘‘பிந்த் தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, பாஜகவின் தாமரை சின்னத்துக்கே வாக்கு விழுந்ததாக ரசீது வந்துள்ளது. ஜனநாயகத்தை சோதிப்பதை தேர்தல் ஆணையம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே கொண்டு வர வேண்டும்’’ என்றார்.