

ஜம்மு காஷ்மீரில் பழங்கால இந்து கோயிலை மர்ம நபர் சூறை யாடியதை கண்டித்து போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல், 3 வாகனங்களுக்கும் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.
ஜம்முவின் ஜானிபூரில் உள்ள ரூப்நகரில் பழமையான இந்து கோயில் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். இதனால் கோயிலின் ஜன்னல் கதவுகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கோயிலை சூறையாடிய மர்ம நபரை கைது செய்ய வலியுறுத்தி நகரின் பிர தான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படு கிறது. இதையடுத்து கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட ஒரு கும்பல் ஜானிபூர் போலீஸ் நிலையத் துக்குள் நுழைந்து கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கியது. அத்துடன் அங்கிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தது. இதையடுத்து வன்முறை வெடித்ததால், போலீஸார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அந்த கும் பலை விரட்டி அடித்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்
சம்பவம் குறித்து ஜம்மு துணை ஆணையர் சிம்ரன்தீப் சிங் கூறும்போது, ‘‘இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தியது தொடர் பாக வழக்குப் பதிவு செய்து குற்றவாளியையும் கைது செய் துள்ளோம். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் ரூப் நகருக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக வந்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். பதற்றம் நீடித்தாலும், பொதுமக்கள் தற்போது அமைதி காத்து வருகின்றனர். வன் முறையை தடுக்கத் தவறிய உள் ளூர் போலீஸ் அதிகாரி இடை நீக் கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.
பதற்றத்தை தணிக்க ரூப் நகரில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொபைல் மற்றும் இணையதள சேவைகளும் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
சட்டப்பேரவையில் அமளி
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று இந்த விவகாரம் பெரும் புயலை கிளப் பியது. சட்டப்பேரவை நேற்று கூடியதும், பிரச்சினை குறித்து அரசு தரப்பில் இருந்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என பாஜக தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர். தேசிய மாநாட்டு கட்சியினரும் சம்பந்த மில்லாமல் 4 பேர் கைதாகி இருப்பதாக தெரிவித்தனர். இத னால் பாஜக மற்றும் பிற கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் வார்த்தை போர் மூண்டதால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து பேசிய சட்ட அமைச்சர் அப்துல் ஹக் கான், ‘‘ரூப்நகர் காவல் நிலையத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, கோயிலை சூறையாடியவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரது பெயர் யாஸிர் என்பதும் தெரியவந்துள்ளது. உள்ளூர் மக்கள் தான் போலீஸாரை கடமை யாற்ற விடாமல் வன்முறையில் இறங்கினர்’’ என தெரிவித்தார்.
அதே சமயம் பொதுமக்கள் அமைதி காக்கும்படி மாநில முதல்வர் மெகபூபா கேட்டுக் கொண்டுள்ளார்.