

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் அனைத்து வாகனங்களில் இருந்தும் சிவப்பு மற்றும் நீல வண்ண விளக்குகள் அகற்றப்பட்டன.
இந்தியாவில் வி.ஐ.பி. கலாச்சாரத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு முன்னோட்டமாக பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்களில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதையடுத்து, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவர்களது வாகனங்களில் உள்ள சிவப்பு மற்றும் நீல வண்ண விளக்குகளை அகற்றி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்தின் அனைத்து வாகனங்களிலும் இருந்த விளக்குகள் நேற்று அகற்றப்பட்டன.