

பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்க பாடுபடுவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். துர்கா பூஜையை முன்னிட்டு அவர் புதன்கிழமை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்த துர்கா பூஜை திருநாளில், வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உட்பட இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். நாட்டில் அமைதி, மகிழ்ச்சி, வளம் ஆகியவை நிலவுவதற்கு இந்த விழா உதவட்டும். நாம் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெறுவதற்கு தேவையான வலிமை, துணிவு மற்றும் மன உறுதியை வழங்க வேண்டும் என்று துர்கா தேவியிடம் இந்த நாளில் பிரார்த்தனை செய்வோம்.
மேலும், சமூகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவும் எப்பொழுதும் அவர்களுக்கு மதிப்பு கொடுக்கவும் பாடுபடுவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என பிராணாப் தெரிவித்துள்ளார்.