நாய் குட்டிகளை எரித்த 8 சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவு

நாய் குட்டிகளை எரித்த 8 சிறுவர்களை சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவு
Updated on
1 min read

ஹைதராபாத்தில் கடந்த 16-ம் தேதி 8 சிறுவர்கள் மயானத்தில் ஒன்று கூடி, 3 நாய் குட்டிகளை எரித்தனர். அந்த கொடூர காட்சிகளை செல்போன்களில் வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட்டனர்.

நேற்று முன்தினம் வெளியான இந்தக் காட்சியைப் பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள், முஷிராபாத் போலீஸில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து 8 சிறுவர்களையும் கைது செய்த போலீஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்குமாறும் உளவியல் ஆலோசனை வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in