

பொது விநியோகத் திட்டத்தில் (ரேஷன்) இருந்து வருமான வரி செலுத்துவோரையும் அரசு உயரதிகாரி களையும் நீக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ் வான் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. அங்கு குரூப் 1, குரூப் 2 நிலையிலான அதிகாரி கள், வருமான வரி செலுத்து வோர் உள்ளிட்டோர் பொது விநி யோகத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
உணவுச் சட்டத்தை அமல் படுத்துவது தொடர்பாக மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்ட 3 மாதங்கள் அவகாசம் நிறை வடைந்துள்ளது. எனினும் இத்திட் டத்தை இதுவரை அமல்படுத் தாத மாநிலங்களுக்கு கால அவகாசம் மேலும் நீட்டிக்க உத்தே சித்துள்ளோம். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக உணவுச் சட்டத்தை கைவிடும் எண்ணம் அரசுக்கு இல்லை. இந்தச் சட்டத்தில் சில சாதக, பாதகங்கள் உள்ளன. பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை ரூ.2, ஒரு கிலோ அரிசி ரூ.3 என்ற விலையில் கிடைக்கும். அதேநேரம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்க ளுக்கு இத்திட்டத்தில் மாதந் தோறும் நபருக்கு 5 கிலோ கோதுமை அல்லது அரிசி மட்டுமே கிடைக்கும்.
உணவுச் சட்டத்தின் பாதகமான அம்சங்களை திருத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகி றது. இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்.
உணவுச் சட்டம் அமல்படுத்தப்படும்வரை பழைய பொது விநியோகத் திட்ட முறை தொடரும் என்று ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.