Last Updated : 22 Jun, 2016 09:35 AM

 

Published : 22 Jun 2016 09:35 AM
Last Updated : 22 Jun 2016 09:35 AM

மகாராஷ்டிர மாநிலம் தானே சிறையில் கொண்டாடிய கைதிகள்

மகாராஷ்டிர மாநிலம், தானே நகரின் மத்திய சிறையில் உள்ள சுமார் 700 கைதிகள் நேற்று, இரண்டாவது சர்வ தேச யோகா தினத்தை கொண்டாடினர்.

எரவாடா மத்திய சிறை நிர்வாகமும் பதஞ்சலி யோகா சமிதியும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. சிறைத்துறை ஐ.ஜி. பி.கே. உபாத்யாய, சிறை கண்காணிப்பாளர் ஹிராலால் ஜாதவ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கைதி களுடன், உயரதிகாரிகள் மற்றும் சிறை ஊழியர்களும் யோகாசனம் செய்தனர்.

தானே நகரில் தாதோஜி கொண்டதேவ் விளையாட்டு அரங்கில் நேற்று காலையில் நடைபெற்ற யோகா தின விழாவில் மேயர் சஞ்சய் மோர், மாவட்ட ஆட்சியர் மகேந்திர கல்யான்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தானே மனநல மருத்துவ மனையில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், சுமார் 100 நோயாளிகள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேந்திர ஷிர்சத் யோகாசனங்கள் செய்தார்.

நோயாளிகள் சிலர், யோகா பயிற்சியால் தாங்கள் அடைந்த பலன்களை விளக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x